சின்ன சிங்கமும் - சாதி சிறுத்தைகளும்



        நேற்று தமிழக வரலாற்றில் முக்கியமான நாள் ஆமாம் சசிகலா & கோ வுக்கு அளித்த தண்டனை என்பது அவ்வளவு முக்கியதுவம் வாய்ந்தது . நானும்  மன்னார்குடியை சார்ந்தவன் என்பதாலும் அடக்குமுறைக்கும் ,அகங்காரத்துக்கும் அடங்காதவன் என்பதாலும்  சில விஷயங்களில் திவாகரனால் நானும் சில பல மறைமுகமான  பாதிப்புகளை அடைத்தேன் .என் நண்பர்களில் பலர் திவாகரனின் பிறந்தநாள்களில் அவரின் காலில் விழுந்து ஆசிவாதம் வாங்கும் பழக்கத்தை கொண்டுஇருந்ததும் அவர்களை நான் கண்டித்ததும் திவகரனுக்கு தெரியவர என்னை நேருக்கு நேர் பார்த்து முறைக்கும் பழக்கத்தை கொண்டு இருந்தார் அப்படியே எனக்கு எதிராக சில பல விஷயங்களை  மறைமுகமாக செய்தார்கள்.

       சசிகலா சாதியை சேர்ந்த சில புல்லிருவிகள் சசிகலா சிறைக்கு செல்வது திட்டமிட்ட சாதி என்றும் ,அவர்கள் சாதிக்கு எதிராக நடக்கும் அடக்குமுறை என்றும் பிதற்றுகின்றனர் சந்தர்ப்பவாதிகள். உங்கள் சாதிக்கு எதிராக நடக்கும் அடக்குமுறை என்றால் எப்படி ஓட்டுமொத்த இந்தியாவும் இந்த தீர்ப்பை கொண்டாடுகிறது யோசித்துபாருங்கள், உச்சநீதிமன்ற நீதிபதிகள் என்ன சொல்லி இருக்கார்கள் தெரியுமா
படித்துபாருங்கள்..


1. வேதனையான மவுனம் வெகுகாலம் நீடித்ததால் கவலை தரக்கூடிய தகவல்களை மேடையேற்ற வேண்டி உள்ளது.
2. சொத்து சம்பாதிப்பதில் இவர்களுக்கு எந்த விதமான குற்ற உணர்ச்சியும் இல்லை.

3.இவர்களது தந்திரங்களைப் பார்க்கும் போது அதிர்ச்சியாக இருக்கிறது.

4. பணம் சம்பாதிப்பதை அச்சம் இல்லாமல் செய்துள்ளார்கள்.

5.இவர்களிடம் பேராசை மட்டுமே இருந்துள்ளது.

6.இவர்களை அனுமதித்தால் நாட்டில் அமைதி குலைந்துவிடும்.

7.இவர்களை அனுமதித்தால் நியாய தர்மம் பார்ப்பவர்கள் நாட்டில் சிறுபான்மை ஆகிவிடுவார்கள்.

8.இவர்கள் சமுதாயத்துக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும்.

9.வருமானத்துக்கு அதிகமாக 211 சதவிகிதம் சம்பாதித்துள்ளார்கள்.

10.இவர்கள் ஒரே வீட்டில் கூடி இருந்ததே வாழ்வதற்காக அல்ல. சதி செய்வதற்காகத்தான்

இப்போதும் மக்கள்  OPS-க்கு சப்போர்ட் செய்வதற்கு காரணம்  அவர் நல்லவர் என்றோ உத்தமன் என்றோ அல்ல ,,மன்னார்குடி மாபியா மீண்டும் வர கூடாது என்பதால் தான் 

என் நிலைப்பாடும் இதுதான் 






This entry was posted on 7:49 PM and is filed under . You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response, or trackback from your own site.

0 comments: